பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ், தெலுங்கை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டதால், கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதனால் விளம்பரப் படங்களில் நடிக்கவும் அவருக்கு அதிக அழைப்புகள் வருகின்றன. அப்படி சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஆண்கள் உள்ளாடை விளம்பரம் ஒன்று கிண்டலுக்கு ஆளாகியுள்ளதுடன், அதில் நடித்ததால் நெட்டிசன்கள் பலரின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் ராஷ்மிகா.
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் ராஷ்மிகாவும் இணைந்து ஆண்கள் உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். யோகா பயிற்சியாளராக ராஷ்மிகா இருக்க, அவரது மாணவராக இருக்கிறார் விக்கி. யோகா செய்யும் போது ராஷ்மிகா 1, 2, 3 என சொல்ல, அப்போது உள்ளாடை தெரியும் படி விக்கி கையைத் தூக்கிக் கொண்டு நிற்க, அவரது உள்ளாடையைப் பார்த்து ராஷ்மிகா 3.1, 3.2, 3.3 என சொல்ல, உடனே விக்கி கண்ணடித்து 3.4 என தொடர, பதிலுக்கு ராஷ்மிகா 4 என முடிக்கிறார். இதில் விக்கி கவுசல், வெளியே தெரியும்படி அணிந்துள்ள உள்ளாடை, ராஷ்மிகாவை ரொம்பவே ஈர்ப்பதாக அந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படியான உள்ளாடை விளம்பரத்திற்கு ராஷ்மிகாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது மிக சீப்பான விளம்பரம் என்றும் எந்த பெண்ணும் ஆண்களின் உள்ளாடையை அப்படி உற்று கவனிக்க மாட்டாள், உங்களிடமிருந்து இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் நெட்டிசன்கள் ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு மட்டரகமான விளம்பத்தில் அவர் நடிக்கலாமா என ரசிகர்கள் அவருக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.