Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளம் தராமல் மிரட்டியே நடிக்க வைக்கப்பட்ட நடிகை

01 அக், 2021 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Neha-Saxena-shares-her-bad-experience-in-tamil-film

மலையாளத்தில் மம்முட்டியுடன் கசபா மற்றும் மோகன்லாலுடன் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை நேஹா சக்சேனா. மலையாள இயக்குனர் ஒருவர் இயக்கும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி, உரிய சம்பளம் கொடுக்கப்படாமல், இயக்குனரால் மிரட்டப்பட்டே படம் முழுதும் நடித்த திகில் நிகழ்வுகளையும், போலீசார் மூலம் பின்னர் அதற்கு தீர்வு கிடைத்ததையும் தற்போது ஒரு பேட்டியில் கூறி அதிரவைத்துள்ளார். படத்தின் பெயரையோ, இயக்குனரின் பெயரையோ குறிப்பிடாமல் அவர் இந்த சம்பவத்தை விவரித்துள்ளார் நேஹா சக்சேனா.

மலையாள இயக்குனர் ஒருவர் தனது மகனை ஹீரோவாக வைத்து எடுத்த தமிழ்ப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க நேஹா சக்சேனாவை அணுகியுள்ளார். புதியவர்கள் படம் என்பதால் பெரிய நடிகைகள் யாரும் நடிக்க முன்வரவில்லை என்றும் நேஹா நடித்தால் உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் வைத்த இயக்குனர், படத்தில் அவருக்கு ஜோடியாக பிரகாஷ் ராஜ் அல்லது நாசர் நடிக்க உள்ளார்கள் என கூறி சம்மதிக்க வைத்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தால் படம் துவங்க தாமதமாகி, சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஆனால் முதல் நாளில் இருந்தே படப்பிடிப்பில் மோசமான அனுபவங்கள் ஏற்பட ஆரம்பித்தனவாம். நாசரோ, பிரகாஷ்ராஜோ யாருமே நடிக்கவில்லை என்றும் அப்போதுதான் நேஹாவுக்கு தெரிய வந்துள்ளது. தவிர தேவையே இல்லாமல் சில கவர்ச்சியான நெருக்கமான காட்சிகளை படமாக்க முயன்றுள்ளார் இயக்குனர். மேலும் இயக்குனரின் மகனும் படப்பிடிப்பு தளத்தில் சில விரும்பத்தாகத செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதை இயக்குனரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

அதனால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு, தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக நேஹா கூறியதும், இயக்குனர் படத்திற்காக செய்த செலவுகள் அனைத்தும் வீணாகி விடும் என கெஞ்சியுள்ளார். வேறுவழியின்றி நடிக்க ஆரம்பித்த நேஹாவுக்கு மீண்டும் சில தொந்தரவுகள் ஏற்பட்டது. ஆனால் இந்தமுறை இயக்குனர் நேஹாவிடம், படத்தின் தயாரிப்பாளர் பெரிய தாதா என்றும் இப்படி படத்திலிருந்து விலகினால் அவரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறி அவரை வெளியேற விடாமல் செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முதலாளி அவரை ஒருநாள் இரவு தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியது தான்.. நேஹா மம்முட்டியுடன் நடித்த கசபா படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், நிஜத்திலும் அதேபோலத்தான் இருப்பார் என எண்ணிக்கொண்டு அப்படி அணுகினாராம். அவரை திட்டி அனுப்பிய நேஹா, இதையும் இயக்குனரிடம் முறையிட, அவரோ இதை பெரிதுபடுத்த வேண்டாம், இன்னும் பத்து நாட்கள் இந்த ஹோட்டலில் தங்கித்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என மிரட்டலாக கூறினாராம்.

அதேசமயம் இடையில் தனது பாடிகார்டுகள் சூழ தயாரிப்பாளர் வந்தபோது, அவர் மூலமாக எந்த டார்ச்சரும் இல்லையென்றாலும், இயக்குனரின் அடாவடியையும் ஹோட்டல் முதலாளியின் அநாகரிக செயலையும் அவரிடம் கூறியும் கூட அவரும் அதை கண்டுகொள்ளவில்லையாம்.. படப்பிடிப்பின் கடைசி நாளன்று மீதி சம்பளத்தை கேட்டபோது, பத்து நாட்கள் கழித்து தான் தரமுடியும், அதுவும் பேசிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்றும் கூற அதிர்ந்து போனாராம் நேஹா சக்சேனா.

ஒருவழியாக படப்பிடிப்பை முடித்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என வெளியேறிய நேஹா சக்சேனா, அதன்பின் கேரளா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் ஆரம்பத்தில் இயக்குனர், ஹோட்டல் முதலாளி உள்ளிட்டோர் ஆரம்பத்தில் தங்கள் செயலை மறுத்தாலும், நேஹா வைத்திருந்த சிசிடிவி வீடியோ கிளிப்பிங்குகள் ஆதாரமாக இருந்ததால், அதன்பின் அவர்கள் தங்களது செயலை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நேஹாவிற்கு பேசப்பட்ட சம்பளத்தையும் வாங்கி தந்துள்ளனர் போலீஸார். தான் இதுவரை நடித்த படங்களிலேயே மிக கசப்பான அனுபவம் இந்தப்படத்தில் தான் ஏற்பட்டது என்றும், மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்களை வெளியில் கூறியுள்ளேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் நேஹா சக்சேனா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
போதைப்பொருள் கடத்தி கைதான சிங்கம் 2 நடிகர்போதைப்பொருள் கடத்தி கைதான சிங்கம் 2 ... உள்ளாடை விளம்பரம் : ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் உள்ளாடை விளம்பரம் : ராஷ்மிகாவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
03 அக், 2021 - 05:48 Report Abuse
Sanny LIKE SAME AS YOURSELF.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
02 அக், 2021 - 07:15 Report Abuse
Kalaiselvan Periasamy இந்த இயக்குனர், அவரது மகன், ஹோட்டல் முதலாளி யாவரும் கொரோனாவில் இறக்க இறைவன் வழி காட்டுவாயாக .
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02 அக், 2021 - 03:17 Report Abuse
NicoleThomson இந்த .... தான் அடுத்தவரை குறை கூறி எழுதும் லிட்டரேட் கும்பலோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in