மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
சீனியர் நடிகர், நடிகைகளுக்கு இது எடை குறைப்பு சீசன் போல... சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகி படங்களை பகிர்ந்தார். அவை வைரலாகின. அடுத்து பிரபுவும் உடல் எடையை குறைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு. இளம் வயதில் அவருக்கே உரிய உடல்வாகில் பார்ப்பதற்கு அழகாகக் காணப்பட்டார். பின்னர் வருடங்கள் செல்ல உடல் எடை அதிகரித்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பிரபுவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. அதில் பிரபு மெலிந்து காணப்பட்டார். பிரபு 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம். அதற்கு காரணம் மணிரத்னம் தான். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் அநிருத்தப் பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தனது எடையைக் குறைக்க நினைத்த அவர் பொன்னியின் செல்வன் படத்திற்காக குறைத்துள்ளார்.
இதற்காக உடற்பயிற்சி செய்துள்ள அவர் சில இயற்கை முறைகளையும் உணவு உணவையும் பின்பற்றியுள்ளார். பிரபுவின் புதிய லுக்கைப் பார்க்கும் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். விஷால் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வரும் விஷால் 32 படத்திலும் பிரபு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.