மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சூர்யா மற்றும் பாண்டியராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 51 நாட்கள் காரைக்குடி பகுதியில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா ரசிகர்கள் சிலர், அவரை சந்தித்துள்ளார். அப்போது சூர்யாவுக்கு சர்ப்ரைஸாக 'சூரரைப் போற்று' புகைப்படத்தை ஓவியமாக அளித்துள்ளனர். இதை பெற்றுக் கொண்ட சூர்யா ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து வசனங்களுடைய படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும், மேற்கொண்டு இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாகவும், அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் படமாக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க தயாரிப்பு நிறுவனம், இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.