ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
டைரக்டர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து இயக்கப் போகிறார். இந்நிலையில் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் படத்தைப்போலவே இந்த படமும் கிராமத்து கதையில் உருவாகி வருகிறது.
அதிலும் மதுரைக்கதைக்களம் என்பதால் கார்த்தியின் முதல்படமான பருத்திவீரனை சற்று நினைவுபடுத்தும் கதைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் அதிதி, மதுரை தமிழை பேச கற்றுக்கொண்டவர் இப்போது ஒவ்வொரு டேக்கையும் சிங்கிள் டேக்கில் நடித்து கைதட்டல் பெற்று வருகிறாராம். இந்த தகவலை டைரக்டர் முத்தையா, அதிதியின் தந்தையான டைரக்டர் ஷங்கரிடத்தில் சொல்ல, புழகாங்கிதம் அடைந்து விட்டாராம்.