அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, டிடிவி.கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் அபர்ணா தாசும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து பீஸ்ட் படக்குழு ரஷ்யா செல்கிறார்கள். அங்குதான் விஜய் நடிக்கும் பிரமாண்டமான ஆக்சன் கட்சி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்படுகிறதாம். அந்த வகையில் அக்டோபர் இறுதிக்குள் பீஸ்ட் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து விடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.