நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! |

நகுல் நடிப்பில் வெளியான 'தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். தற்போது மகத் நடிப்பில் உருவாகி வரும் 'காதல் Condition apply' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதால் விரைவில் ரிலீசாகும் என தெரிகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. அனிரூத் இசையில் வெளியான 'டூ.. டூ.. டூ' என்ற பாடல் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்த பாடலுக்கு திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.