ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! |

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'நாங்க வேற மாரி' பாடல் கடந்த மாதம் யூடியூபில் வெளியாகி 26 மில்லியன் பார்வைகளைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகும், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆயுத பூஜைக்கு வருமா, தீபாவளிக்கு வருமா என பட வெளியீடு பற்றியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக 'வலிமை' பற்றிய அப்டேட் நாளை வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.
எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி படத்தின் டீசர் பட வெளியீட்டுத் தேதியுடன் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான முதல் சிங்கிள் கூட எந்த அறிவிப்பும் இல்லாமல்தான் வெளியானது. அது போலவேதான் டீசரும் வெளியாகும் எனத் தெரிகிறது.
'அண்ணாத்த, மாநாடு' ஆகியவற்றுடன் தீபாவளி போட்டியில் 'வலிமை' களமிறங்குமா அல்லது 'எனிமி, அரண்மனை 3' ஆகியவற்றுடன் ஆயுத பூஜை போட்டியில் களமிறங்குமா அல்லது 'வலிமை'யுடன் தனியாக களமிறங்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.