அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட் 23ம் தேதி தமிழ்நாட்டில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 28ம் தேதி, அதற்கடுத்து செப்டம்பர் 3ம் தேதியும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகவில்லை. செப்டம்பர் 9ம் தேதி 'லாபம்', 10ம் தேதி 'தலைவி', 17ம் தேதி 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தன. கடந்த ஒரு மாதத்தில் அதிக பட்சமாக கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது.
ஆனால், நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி ''பிளான் பண்ணி பண்ணனும், சூ மந்திரக்காளி, பேய் மாமா, வீராபுரம், சின்னஞ்சிறு கிளியே, பிறர் தர வாரா, சிண்ட்ரல்லா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் ஏற்படலாம்.
இருப்பினும், இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி தான். ஆனால், மக்கள் தான் தியேட்டர்கள் பக்கம் இன்னும் அதிகமாக வரத் தயங்குகிறார்கள்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில பெரிய படங்கள் வர உள்ளதால் அப்போது தியேட்டர்கள் கிடைக்க பிரச்சினையாக இருக்கும். அதனால், இந்த வாரம் இத்தனை படங்கள் வெளிவருதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.