வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான முதல் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவிற்கு இன்று(செப்., 21) பிறந்த நாள் ஆகும். அதை முன்னிட்டு அவரது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு அப்படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.