‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில பங்கேற்றவர், பின்னர் குக் வித் கோமாளி ஷோவிலும் பங்கேற்றார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது சூர்யாவின் 2டி தயாரிப்பில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பக்கா கிராமத்து கதையில் உறவுகள் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதையில் இப்படம் தயாராகி உள்ளது. வருகிற 24-ந்தேதி ஓடிடியில் இப்படம் வெளியாக உள்ளது. சோசியல் மீடியாவில் செம ஆக்டிவ்வாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது கறுப்பு நிற உடையில் எடுத்த கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களை சொக்க வைக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளன.