பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
நாளைய மனிதன், பவர் ஆப் உமன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் ஜெயதேவி. இவருக்கு பிரான்சில் உள்ள செயிண்ட் டேனிஷ் நகர மேயர் புதிய கவுரவத்தை வழங்கி இருக்கிறார். அங்கு வாழும் தமிழ் அமைப்புகள் ஜெயதேவியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. அதை ஏற்று அங்கு சென்றார் ஜெயதேவி. அவருக்கு அங்கு பாராட்டு விழா நடந்தது. அவர் இயக்கிய பவர் ஆப் உமன் திரைப்படமும் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜெயதேவியை டேனிஷ் நகர மேயர் லினோனி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து டேனிஷ் நகரில் திரையிட வேண்டும் அதற்காக உங்களை டேனிஷ் நகரத்தின் இந்திய சினிமா தூதராக நியமிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயதேவி கூறும்போது "எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்தேன். 15 படங்கள் இயக்கிய எனக்கு ஒரு கலைமாமணி விருதுகூட தரவில்லை. பவர் ஆப் உமன் படத்துக்கு மட்டும் மாநில விருது கிடைத்தது. சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் எனக்கு இந்த புதிய கவுரவமும், பாராட்டும் ஆறுதலை அளித்துள்ளது" என்றார்.