வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' |

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் உடன் பிறப்பே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சசிகுமார், ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். சூரி, நிவேதிதா சதிஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கிராமத்துக் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட் வெளியாகியது. படம் அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். தற்போது உடன்பிறப்பே திரைப்படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி ஆயுத பூஜை தினத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.