இரண்டு பாகங்களாக வெளியாகும் தேவாரா | வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா | 16 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அஜ்மல் - விமலா ராமன் | நிஷா - கணேஷ் தம்பதிக்கு ஆண் குழந்தை | கார் விபத்தில் சிக்கிய சின்மயி : கோபமாக வெளியிட்ட பதிவு | எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி | திலீப்பின் தங்கமணி படத்தில் இணைந்த நான்கு ஆக்ஷன் இயக்குனர்கள் | 75 நாட்களில் 150 மில்லியனை நெருங்கிய துல்கர் சல்மானின் வீடியோ ஆல்பம் | ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் | அக்., 27ல் ரிலீஸாகும் கங்கனாவின் ‛தேஜஸ்' |
நடிகை மேகா ஆகாஷ் தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட , வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் , ஒரு பக்க கதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகமான பார்வைகளை பெற்று கொண்டு வருகிறது.
இவர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மேகா ஆகாஷ் வரவேற்பை பெற்றார். இதையடுத்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவின் பூமாராங் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று புதிய சாதனை ஒன்றை பெற்றுள்ளார். இதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடற்கரை மணலில் கோலம் போன்று வரைந்து 3 மில்லியன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.