பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

பொதுவாக சினிமா பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகள் அவ்வபோது ஹேக்கர்ஸ் மூலமாக முடக்கப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட சந்தானத்துடன் ஜோடியாக நடித்த நடிகை ஆஷ்னா ஜவேரியின் பேஸ்புக் கணக்கு கூட ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டதாக கூறி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது மலையாள நடிகை நமீதா பிரமோத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டது. அதே சமயம் அதிர்ஷ்டவசமாக சில மணி நேரங்களிலேயே அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
இது குறித்து கூறியுள்ள நமீதா பிரமோத், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தேவையற்ற செய்திகள் காணப்படுவதாக எனது தோழிகள் பலர் கூறினார்கள். அதன்பிறகு தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதை நான் அறிந்தேன். இதனால் மற்றவர்களுக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், என்று கூரியுள்ளார் நமீதா பிரமோத்.