சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
கிராமத்து வெள்ளந்திரி இளைஞன் கேரக்டருக்கு புகழ்பெற்ற சசிகுமார் தற்போது நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்காக நீண்ட முடிவளர்த்திருக்கும் அவர் தலையை சிலிப்பு கொண்டு பன்ஞ் டயலாக் பேசுகிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணியில் துப்பாக்கி சாகசம் செய்கிறார். என்ன தம்பிங்களா கொஞ்ச நேரம் விளையாடி பார்க்கலாமா என்று வில்லன்களை அழைக்கிறார்.
இந்த படத்தை அனிஸ் இயக்குகிறார். வாணி போஜன் ஹீரோயின். பிந்து மாதவி வில்லி. சதீஷ் நினசம், ஜெயபிரகாஷ், ஹரீஷ் பெரடி உள்பட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார்.