அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சமூக வலைத்தளங்களில் எதைத்தான் வைரலாக்குவார்கள் என்று தெரியாது. எந்தக் காரணமும் இல்லாமல் 'நேசமணி'யைக் கூட வைரலாக்கியவர்கள்தான் இந்த சமூக வலைத்தளவாதிகள். அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக கண்ணில்பட்டால் அதைப் பற்றிப் பேசிப்பேசியே வைரலாக்கிவிடுவார்கள்.
ஏஆர் ரகுமான் மீசை வைத்துள்ளதை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக்கி அதை வைரலாக்கியிருக்கிறார்கள். பல வருடங்களாய் மீசை வைக்காத ஏஆர் ரகுமானைத்தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் புதிதாக மீசை வைத்துள்ளதுதான் இந்த வைரலுக்குக் காரணம்.
ரகுமானின் இந்த புதிய தோற்றப் புகைப்படத்தை பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விதவிதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர். ரகுமானின் பதிவிலேயே பல பிரபலங்கள், ரசிகர்கள் அவரது மீசை தோற்றத்தை வரவேற்றும், வேண்டாமென்றும் சொல்லி கமெண்ட் செய்துள்ளார்கள்.
ரகுமானின் இந்த திடீர் தோற்ற மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விரைவில் அது பற்றி அவரே சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஏஆர் ரகுமான் தற்போது தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு மட்டும் இசையமைத்து வருகிறார்.