பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது |

வடநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்தபிறகு அச்சு அசலான தமிழ்நாட்டு மருமகளாக மாறிவிட்டவர். இப்போது இருவருமே முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இங்கு அவர்களுக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கரில் விவசாய நிலமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது குடும்பத்துடன் அங்கு சென்று செட்டிலாகிவிட்டவர்களுக்கு அந்த ஊரும், விவசாயமும் பிடித்து விட அங்கேயே நிரந்தரமாக குடியேறவும் முடிவு செய்து விட்டார்கள். என்றாலும் மகள்களின் படிப்பு. சீரியல் நடிப்பு இவற்றின் காரணமாக இங்கும், அங்குமாக மாறி மாறி வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களது விவசாய நிலத்தின் அருகே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் விவசாய நிலத்தை பிளாட்டுகளாக விற்பனை செய்ய விளம்பரம் செய்து வந்தது. இதையறிந்த தேவயானி அந்த நிறுவனத்திடமிருந்து 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதை விவசாய நிலமாக மாற்றி உள்ளார். அதில் தற்போது செண்டு மல்லி பயிரிட்டுள்ளார்.
இயற்கை விவசாயியாக மாறியதுடன் வீட்டுமனையாக இருந்த விளைநிலத்தை மீட்டு அதில் விவசாயம் செய்யும் தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.