2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |
தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன சேலை? என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.