விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி |
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் அவர் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தடுப்பூசி போட்டதால்தான் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் இதனை அரசு மருத்துவர்களும், அதிகாரிகளும் மறுத்தனர்.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.