ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் தமன்னா. தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் டீகே இயக்கும் திகில் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர சீட்டிமார், கஹானி, மேஸ்ட்ரோ உள்ளிட்ட 5 தெலுங்கு படத்திலும், பிளான் ஏ பிளான் பி, போலே சுடியன் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இத்தனை பிசியான வாழ்க்கைக்கு இடையிலேயும் தற்போது புதிதாக புத்தகம் எழுதி எழுத்தாளராகவும் மாறி இருக்கிறார். அவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர் பேக் டு ரூட் (வேர்களை தேடி). பண்டைய கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகள் மூலம் நோய்களை தடுத்து ஆயுட் காலத்தை நீட்டிக்கும் வழி முறைகள் குறித்து புத்தகத்தில் அவர் எழுதி உள்ளார். அவருடன் இணைந்து லூக் கவுண்டினோகோ என்பவரும் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறியிருப்பதாவது: இது நான் எழுதிய முதல் புத்தகம் என்பதால் அதிக மக்களை சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புத்தகத்தின் மூலம் நமது பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். வேகமான இன்றைய உலகத்தில் மக்கள் கலாசார பண்பாட்டை அறிந்து கொள்வது முக்கியம். என்கிறார்.