‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! |
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. என்றாலும் புதிய படங்கள் தியேட்டருக்கு வர தயக்கம் காட்டி வருகிறது. காரணம் ரசிகர்களின் வருகை குறைவாக இருக்கிறது. இதனால் டப்பிங் படங்கள் தியேட்டர்களில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமி மலையாளத்தில் நடித்த படம் கஸாபா. இதில் மம்முட்டி, நேகா சக்சேனா, ஜெகதீஷ், சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நிதின் ரஞ்சி பணிக்கர் இயக்கி இருந்தார், ராகுல் ராஜ் இசை அமைத்திருந்தார். சமீர் ஹக் ஒளிப்பதிவு செய்திருந்தார், குட்வில் எண்டர்டெயின்மென்ட் சார்பில் இயக்குனரே தயாரித்திருந்தார்.
இந்த படம் தற்போது சர்க்கிள் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளிவருவதாக அறிவித்துள்ளனர். ஏ.கே.பிக்சர்ஸ் சார்பில் ஏ.டி.கிருஷ்ணன் வெளியிடுகிறார்.