கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
5 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த படம் கசாபா. இதில் மம்முட்டி, வரலட்சுமி சரத்குமார், நேகா சக்சேனா, ஜெகதீஷ், சம்பத்ராஜ், சித்திக் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நிதின் ரஞ்சி பணிக்கர் இயக்கி இருந்தார், ராகுல் ராஜ் இசை அமைத்திருந்தார், சமீர் ஹக் ஒளிப்பதிவு செய்திருந்தார். குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
மர்மமான முறையில் நடந்த ஒரு பணக்கார குடும்பத்தின் கொலை மர்மத்தை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை. தற்போது இந்த படம் சர்கிள் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். வருகிற 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.