சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். 4 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் 5வது சீசன் தமிழில் துவங்க உள்ளது. தற்போது இதற்கான பணிகள் துவங்கி விட்டன. போட்டியில் பங்கேற்பவர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் உலாவ தொடங்கிவிட்டன. கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்கள் தள்ளியே துவங்குகிறது. அனேகமாக அடுத்தமாதம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 5க்கான புரொமோஷன் போட்டோ ஷூட் நிகழ்வு நாளை(ஆக., 24) துவங்க உள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அதோடு இந்த வார இறுதியில் பிக்பாஸ் சீசன் 5க்கான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாக உள்ளது. அநேகமாக இது நிகழ்ச்சிக்கான டீசராக இருக்கலாம் என தெரிகிறது.
இந்த முறை பிக்பாஸ் 5 லோகோவும் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சீசனை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல பல புதிய மாற்றங்களையும் செய்ய உள்ளனர்.