பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தெலுங்கில் ஆர்எக்ஸ்-100 என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா. அதன்பிறகும் ஹிப்பி, கேங்க்லீடர் என சில படங்களில் நடித்தவர் தற்போது ராஜா விக்ரமார்கா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு, தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் கார்த்திகேயா. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐதராபாத் பெண் ஒருவருடன் கார்த்திகேயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தகவலை இன்னமும் கார்த்திகேயா அறிவிக்கவில்லை என்றாலும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.