திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை : 'தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க உழைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரை உலகை காக்கும் வகையில் திரையரங்குகளை திறந்து ஐம்பது சதவிகிதம் இருக்கைகளுடன் இயங்குவதர்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகமெங்கும் உள்ள திரை உலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழ வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்'.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.