ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ‛யூ-டியூப்' சேனல் ஒன்றை துவக்கியுள்ளார். இதில் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால் சினிமா உலகமே இருண்டு விட்டது. என்னை நான் எப்போதுமே புத்துயிராக வைத்துக் கொள்ள சினிமா மூலம் உங்களுடன் பேசி வந்த நான், இனி இந்த சேனல் மூலம் பேச உள்ளேன். இதுவரை 70 படத்தை இயக்கியுள்ளேன். பலரை அறிமுகப்படுத்தியுள்ளேன். சாதிக்க நினைக்க உள்ள இளைஞர்களுக்கு என் வாழ்க்கை பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சி. பல உண்மைகளை உடைத்து சொல்லப்போகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.