'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2020ல் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் இடம் பெற்ற போட்டியாளர்களில் காதலிக்கிறார்களோ என்ற பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ். இருவரும் அடிக்கடி ஒன்றாகப் பேசிக் கொள்வதும், மற்றவர்களுடன் அதிகம் பேசாமல் பாலாஜியுடன் மட்டுமே ஷிவானி பேசுவதுமாகவும் கடந்த சீசனில் 'காதல்' பரபரப்பை உருவாக்கினார்கள். அதன்பின், வீட்டிற்குள் வந்த ஷிவானியை அவரது அம்மா நன்றாகத் திட்டியதும் ரசிகர்களுக்கு மறந்திருக்காது.
ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒரு ஜோடியை காதலிப்பது போல் காட்சிகளை அமைத்து பரபரப்பை ஏற்படுததுவதை பிக் பாஸ் குழுவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தக் காதல் கதைகள் பிக் பாஸ் வீட்டுடன் முடிவடைந்துவிடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஷிவானிக்கு பாலாஜி வாழ்த்து கூற அதற்கு ஷிவானியும் 'தேங்ஸ் டா பாலா' என்று கூறியிருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது பிக் பாஸ் காதல் காட்சிகளை மறந்து இருவரும் நிஜ வாழ்வில் உடன்பிறவாத அண்ணன், தங்கையாக மாறிவிட்டார்களோ என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.