பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே.
இதையடுத்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டே அரைக்கால் சட்டையுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இதற்கிடையில் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் என்ற பிரம்மாண்ட படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் பற்றி அவர் கூறியதாவது, விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர். சென்னையில் மழை காரணமாக விரைவாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. எனக்கு மும்பை திரும்பிச் சென்றது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என்னை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது போல இருந்தது. எனக்கு ஆக்ஷன் ரோல்களில் நடிக்க ஆசை" என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.