டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். தற்போது தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அறிமுகமான 'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்தார். 'மாஸ்டர்' படத்திலும் கிளாமரில்லாத கதாபாத்திரம் தான்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனைப் பார்த்தால் ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள். சமயங்களில் அதிர்ச்சியும் கூட அடைவார்கள். அந்த அளவிற்கு கிளாமர், கவர்ச்சி என விதவிதமான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டுக் கொண்டே இருப்பார்.
நேற்று அவர் வெளியிட்ட சில கவர்ச்சிப் புகைப்படங்கள் கூட அதிர்ச்சி ரகம் தான். “திங்கள் கிழமை, சனிக்கிழமையாகத் தெரிந்தால்....” என்ற வாசகத்துடன் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட புகைப்படங்களுக்கு மொத்தமாக 15 லட்சம் லைக்ஸ் வரை கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அல்ல ஆனந்தம் தான் போலிருக்கிறது.