தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

தெலுங்குத் திரையுலகில் தனி ஸ்டார் அந்தஸ்துடன் இருப்பவர் சிரஞ்சீவி. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதில் களமிறங்கி தெலுங்கு சினிமாவுக்காக தற்போது பல விஷயங்களையும் முன்னெடுத்துச் சென்று வருகிறார்.
தனிக்கட்சி ஆரம்பித்து பின்னர் அதை காங்கிரசுடன் இணைத்து, மத்திய மந்திரியாகவும் பணியாற்றி, அரசியலே வேண்டாமென ஒதுங்கி, தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இரண்டு புதிய படங்களை ஆரம்பிக்க உள்ளார். நேற்று கூட தெலுங்குத் திரையுலகத்தின் நலனுக்காக பல தெலுங்கு சினிமா பிரமுகர்கள் சிரஞ்சீவி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர்.
தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி தீவிர ஆதரவு தருகிறார் என அங்கு சில சர்ச்சை எழுந்தது. கன்னட நடிகரான பிரகாஷ் ராஜை அவர் ஆதரிப்பது தவறு என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, இன்று பிரகாஷ் ராஜ் ஜிம்மில் சிரஞ்சீவியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “பாஸ்-ஐ அதிகாலையில் ஜிம்மில் சந்தித்தேன். திரையுலக ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா (அண்ணன்), அவரைப் பெற்றதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்,” என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்காகவே இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார் என்ற குரல்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.