ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் ஆரம்பமாகியுள்ளது. அங்கு 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைவதாகத் தகவல்.
'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் சமந்தாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் 'சாகுந்தலம்' தெலுங்குப் படத்தில் நடித்து முடித்த சமந்தா, புதுச்சேரிக்கு இப்படத்தின் படப்பிடிப்புக்காக வந்துள்ளார்.
கடந்த வருடக் கடைசியில் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்தது. கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை. இப்போது கடைசி கட்டப் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ரெண்டு காதல்' காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. 17 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் யு டியூபில் கடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த அப்டேட்களைத் தர உள்ளார்களாம்.