ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூர்யா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின்போது 2007-2008ம் ஆண்டு முதல் 2008-2009ம் ஆண்டுக்கான வருமான வரி மதிப்பீடு செய்து 2011ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் சூர்யா தரப்பிலும் வருமானவரி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நடிகர் சூர்யா 3 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.
இப்படியான நிலையில் தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால் வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் சூர்யா.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சோதனை நடந்து 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நடிகர் சூர்யா தாமதமாகத்தான் தாக்கல் செய்துள்ளார். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை. அதனால் வருமான வரி சட்டப்படி வரி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை என்று நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு ஏற்கனவே நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.