அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
பொதுவாக நயன்தாரா தான் நடித்து வரும் படங்களின் எந்தவொரு விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வாறு சில படங்களில் கலந்து கொண்டாலும், இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து எந்தவொரு நிகழ்ச்சியிலும் பேசியதில்லை. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி நேற்று டிவியில் ஒளிபரப்பானது. அதில், கையில் அணிந்துள்ள மோதிரம் வைரலானது குறித்துக் கேட்டதற்கு, தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதற்கான மோதிரம் என்று குறிப்பிட்டார் நயன்தாரா.
மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய டிடி அடுத்த கேள்வியாக திருமணம் செய்வீர்களா அல்லது லிவ் லின் டுகெதரா எனக் கேட்க, “நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன். ஆனால், அனைவருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன். இதற்கு மேல் எதையும் கேட்காதே டிடி” எனக் கூறியுள்ளார்.