லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நேற்றுடன் 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலர்களாகவே இருந்து வருகிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இதனிடையே, தங்களது காதலின் ஆறு வருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜோடிப் புகைப்படங்களை வெளியிட்டு, “ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்று தெரியவில்லை. நானும் ரௌடிதான் படத்தின் போது காத்து வாக்குல எடுத்த சில தருணங்கள்,” என தனது காதலைக் கொண்டாடுகிறார் விக்னேஷ் சிவன்.