''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விஷால், ஆர்யா, மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் நடித்து முடித்துள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு மற்றுமொரு பிரமாண்ட பட்ஜெட் படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று அதன் தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம்(அண்ணாத்த) வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல். அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் ஆதரவு கேட்கிறேன். சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் இல்லை
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே (அண்ணாத்த) திரையிட்டால் எப்படி?. எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை நடந்ததும் கிடையாது. என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய ஷேர் சிறியது தான் என்றாலும் எங்களுக்கு அது கிடைத்துவிடும்.
தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் தேவையானவற்றை செய்து ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார்.
இவ்வாறு அவர் அதில் பேசியிருக்கிறார்.
ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரித்துள்ள நிறுவனம் ஆளும் திமுக., அரசுக்கு நெருங்கிய உறவு. அதோடு இந்த படத்தை முதல்வரின் மகனும், நடிகருமான உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ஏற்கனவே அண்ணாத்த படம் அதிக தியேட்டரில் வெளியாவதால் தங்களது படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்காது என சிம்புவின் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இப்போது அடுத்த சிக்கலாக எனிமி படத்தின் தயாரிப்பாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் எனிமி படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்குமா இல்லை வெளியீடு தள்ளிப்போகுமா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.