நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு செக் குடியரசு. செக் மொழி பேசும் மக்களை கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொலை ஒரு கோடியே 40 லட்சம். இந்த குட்டி நாட்டில் ஆண்டுக்கு 10 திரைப்படங்கள் வரை தயாராகிறது. இந்த நாட்டின் திரைப்பட விழா சென்னையில் இன்றும், நாளையும் (அக்டோபர் 22, 23)நடக்கிறது. இதில் வுமன் ஆன் தி ரன், கொல்யா, என்ஜாய் தி வோர்ல்ட் வித் யூ என்ற புகழ்பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹவோர்கா, சென்னை துணை தூதர் ராம் அருண், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தாகூர் பிலிம் செண்டரில் நடக்கும் இதற்கான ஏற்பாடுகளை செக் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு செய்துள்ளது.