ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதாரவி, கவுதம் மேனன், தம்பி ராமய்யா ஆகியோரது நடிப்பில் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜூபின் தற்போது பிசியான இசை அமைப்பாளராகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : சிறு வயதிலிருந்தே எனக்கு இசையில் ஆர்வம். எனது 6 வயதிலேயே பியானோ கற்றுக்கொண்டேன். ஏ.ஆர்.ரகுமானையுடைய குருவான ஜேக்கப் ஜான் என்பவர் தான் எனது முதல் குரு. ஜி.வி.பிரகாஷின் குருவான தாஸ் டேனியல் என்பவர் எனது இரண்டாவது குரு, எனது வழிகாட்டி அவரால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
விண்மீன்கள் படம் தான் இசையமைப்பாளராக எனது முதல் படம். தொடர்ந்து மோகன்.ஜியுடன் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் என தொடர்ந்து மூன்று படங்களுக்கு பணியாற்றியுள்ளேன். ருத்ர தாண்டவம் படத்திற்கு இசையமைத்தது மிகவும் சவாலாக இருந்தது. ருத்ர தாண்டவம் படம் வெளியான அன்று மாலையே இன்னொரு படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். அது என் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். தீபாவளி முடிந்த பிறகு அந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும் 3 படங்களுக்கு இசை அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.என்றார்.