அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் | பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர் | கோட்டயத்தில் நடந்த உண்மை சம்பவம்: தலைவர் தம்பி தலைமையில் இயக்குனர் பேட்டி | உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசான்ட்ரா. சமூக வலைத்தளங்களில் பல நடிகைகள் பல பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அவர்களைத் தொடரும் பாலோயர்களுக்கு ஏற்றபடி அதற்கான தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகை ரெஜினா 'விஸ்கி' ஒன்றிற்கான விளம்பரம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், “9 வயதில் தொகுப்பாளராக வந்து, பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து சினிமாவுக்குள் வந்தேன். எனது வாழ்க்கையில் எனது இந்தப் பயணம் ஒரு பொக்கிஷம்,” எனக் குறிப்பிட்டு விஸ்கியைப் பற்றியும் பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.
ரெஜினாவின் இந்த விளம்பரத்திற்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். “ஆல்கஹாலை விளம்பரப்படுத்த வேண்டாம், உங்களைப் போன்ற நடிகைகளை அன்பாலோ செய்கிறேன், வெளிப்படையாக இப்படி ஆல்கஹாலுக்கு விளம்பரம் செய்ய அனுமதி இருக்கிறதா, ஆல்கஹாலுக்குப் போய் பிரமோட் பண்ணிட்டு இருக்க, கேவலமா இல்லையா,” என பலவிதமான கண்டனக் கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள்.