ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் |
'என்னை அறிந்தால்' மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் பேபி அனிகா. தற்போது குமரிப்பருவத்தில் இருக்கும் அனிகா, கதாநாயகியாக மாறுவதற்காக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே இவரை தங்களது படங்களில் அறிமுகப்படுத்த இயக்குனர்கள் பலர் முன்வந்துள்ளனர்.
அந்தவகையில் கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கப்பேலா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனிகா. ஆனால் அதற்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் இளைய மகள் ஷிவாத்மிகாவை தான் ஒப்பந்தம் செய்வதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அனிகாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஓரளவு நல்ல அறிமுகம் இருப்பதால் அதையே பிளஸ் பாயிண்ட்டாக கருதி அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.