சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
ஏறக்குறைய ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான் நடிகர் பிரித்விராஜும், நடிகை கனிகாவும்.. தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்ததாலோ என்னவோ கனிகா மலையாள நடிகையாகவே பார்க்கப்படுகிறார். ஆனாலும் இத்தனை வருடங்களில் பிரித்விராஜுடன் இணைந்து ஒரு படத்தில் கூட கனிகா நடித்தது இல்லை.
இந்தநிலையில் தற்போது மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்கி வரும் 'ப்ரோ டாடி' படத்தில் கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரித்விராஜின் இந்த வளர்ச்சி குறித்து கனிகா கூறும்போது, “பலவிதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்ததை பார்த்திருக்கிறேன். பல கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பால் உயிர் கொடுத்திருப்பதை பாராட்டி இருக்கிறேன்.. இதோ இப்போது முதன்முறையாக அவரது டைரக்சன் அவதாரத்தை நேரிலேயே பார்க்கும் வாய்ப்பும் மிகச்சிறந்த அனுபவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. நான் எப்போதுமே அவருக்கும் அவரது வேலைசெய்யும் விதத்திற்கும் ரசிகையாகவே இருந்து வருகிறேன்” என புகழ்ந்து கூறியுள்ளார்.