வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
'என்னை அறிந்தால்' மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் பேபி அனிகா. தற்போது குமரிப்பருவத்தில் இருக்கும் அனிகா, கதாநாயகியாக மாறுவதற்காக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே இவரை தங்களது படங்களில் அறிமுகப்படுத்த இயக்குனர்கள் பலர் முன்வந்துள்ளனர்.
அந்தவகையில் கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கப்பேலா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனிகா. ஆனால் அதற்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் இளைய மகள் ஷிவாத்மிகாவை தான் ஒப்பந்தம் செய்வதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அனிகாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஓரளவு நல்ல அறிமுகம் இருப்பதால் அதையே பிளஸ் பாயிண்ட்டாக கருதி அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.