'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய 'த பேமிலி மேன் 2' வெப் சீரிசை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள வெப் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அத்தொடரில் ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்.
'த பேமிலி மேன் 2' தொடரில் இலங்கைத் தமிழர்களையும், போராட்டங்களையும் தவறாக சித்தரித்ததாக இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே மீது குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்கள், சில அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் அத் தொடருக்கு எதிராக கண்டனை அறிக்கை வெளியிட்டன.
'த பேமிலி மேன் 2' தொடரைப் புறக்கணிக்க வேண்டும், அத்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோரைப் புறக்கணிக்க வேண்டும், அமேசான் ஓடிடி தளத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள்.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விஜய் சேதுபதி தற்போது அந்த இயக்குனர்களுடனேயே கூட்டணி சேர்ந்து ஒரு புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பயோபிக் படமான '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருன் வெளியானது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது அதேபோன்று இலங்கைத் தமிழர்களைத் தவறாக சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இயக்குனர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.