'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கோடம்பாக்கத்தில் அறிமுக இயக்குனர்களின் கதை சொல்லல் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் தான் அதிகம் உள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது, பூமிகா, டிரைவர் ஜமுனா, த கிரேட் இண்டியன் கிச்சன், ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடி, ரிபப்ளிக், டக் ஜகதீஷ் என வரிசையாக இருக்கிறது. கதாநாயகியாக ரணசிங்கம், கனா போன்ற அழுத்தமான படங்களில் முத்திரை பதித்துவிட்டுதான் இப்போது திரில்லர், ஹாரர் பக்கம் வந்துள்ளேன்.
அறிமுக இயக்குனர்களை பொறுத்தவரை அவர்கள் எப்படி படத்தை எடுப்பார்களோ என்ற அச்சமும் தயக்கமும் இருக்கும். ஆனால் எனக்கு கதைதான் முக்கியம். ஒரு படத்தில் காமெடி, எமோஷனல், காதல் எல்லாமே இருக்கவேண்டும். அவற்றை எல்லாம் தாண்டி ரசிகர்கள் எளிதில் தங்களை பிணைத்துக்கொள்ளும் ஒரு விஷயமும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.