ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் நெற்றிக்கண். வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அஜ்மல் கூறுகையில், ‛‛கோ படத்திற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் இடையில் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப, நெற்றிக்கண் மிகச்சிறந்த வாய்பாக அமைந்தது. இரண்டு கதாப்பாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சமீபத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஆங்கில ஜோக்கர் பட பாத்திரத்தை ஒத்தது தான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும். ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாப்பாத்திரத்தை ரசிப்பார்கள். நயன்தாரா, கேமராமேன் ஆர்.டி.ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி. இந்தப்படம் இதுவரையிலான தமிழ் திரில்லர்களை, மிஞ்சும் படைப்பாக இருக்கும் என்றார்.