'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் படம் ஒன்றை இயக்குனர் ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கி வருகிறார். இதில் தமிழில் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடிக்கின்றனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா நடிக்கின்றனர்.
இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான் விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இருமொழியில் படமானாலும் இதன் தமிழ் பதிப்பு சென்னையிலும், மலையாள கதை கொச்சியிலும் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் படபிடிப்பை முடித்த படக்குழுவினர் கடைசி நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.