ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது மட்டுமே பதிவுகளை போட்டு வருகிறார். அதனால் அவருக்கு குறைவான பாலோயர்களை இருந்து வந்தனர். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு, குரான் சம்பந்தப்படட்ட சில கருத்துக்களை வெளியிட்டபோது, மதப்பிரச்சாரம் செய்வதாக அவரை நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதனால் நிறைய பாலோயர்கள் அவரை பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களுக்கு இருக்கும் பாலோயர்கள்கூட பிரபல இசையமைப்பாளரான யுவனுக்கு இல்லை என்று சிலர் சோசியல் மீடியாவில் அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். அதையடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கான பாலோயர்களை அதிகப்படுத்தும் வேலைகளை முடுக்கி விட்டனர்.
அதோடு, யுவன் சங்கர் ராஜாவும் தனது மகளுடன் தான் நடந்து செல்லும் வீடியோ, அதன் பின்னணியில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடல் என சில வீடியாக்களை வெளியிட்டபிறகு அவரை பின்தொடரும் பாலோயர்கள் அதிகரித்தனர். இதன்காரணமாக தற்போது இன்ஸ்டாகிராமில் யுவனை ஒரு மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்.