பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமாகி ஓ மை கடவுளே படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர் வாணி போஜன். அவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அதையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, தற்போது சீயான்-60, காசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கான ரசிகர் வட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் அதிரடி போட்டோ சூட்களை நடத்தி அவ்வப் போது வெளியிட்டு வரும் வாணி போஜன், தற்போதும் ஒரு போட்டோ சூட் நடத்துவதை வீடியோவாக எடுத்து அதில் மின்னலே பட பாடலை இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் வாணிபோஜன் ஜொலிக்கும் அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.