புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிப்பில் கொடி கட்டி பறக்கும் நடிகைகள் அனைவருக்குமே பக்கா மாஸ் ஹீரோயினாக வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். கருப்பு வெள்ளை காலத்தில் சாவித்ரி, 80 களில் சரிதா, இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்.
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடையாளம் கொடுத்தது அட்டக்கத்தி. அதில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். அப்படி தொடங்கியதோ என்னவோ வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். காக்கா முட்டை படம் அவரை தேசிய விருது வரை பேசவைத்தாலும். இரு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தன் மூலம் அவரை மாஸ் ஹீரோயினாக கற்பனையில் கூட எந்த இயக்குனரும் காணவில்லை.
தனக்கு ஏற்பட்டுள்ள குடும்ப இமேஜை மாற்ற நினைக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தன்னை வேறுவிதமாக மாற்றிக் காட்டும் முயற்சியாக கிளாமரான போட்டோ ஷூட்களை நடத்தி அதன் படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் படங்கள் அதற்கு சிகரம் வைத்தது போன்று இருக்கிறது. கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஐஸ்வர்யா ஜொலிக்கும் வாய்ப்புகள் இருப்பதை இந்த படங்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரலாம்.