சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்திற்காக விஷால் ஒப்பந்தமானார். பிரபல குறும்படமான, “எது தேவையோ அதுவே தர்மம்!” என்கிற குறும்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சரவணன் அந்த படத்துக்காக பல விருதுகளை பெற்று இருந்தார். இந்நிலையில் தான் இவர் விஷால் நடிக்கும் விஷால் 31 என்கிற இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலத்தில் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின்போது நடிகர் விஷால் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.